நான்கு மாதங்களின் பின்னர் பூமிக்கு திரும்பியுள்ள விண்வெளி வீரர்கள்!

Sunday, October 30th, 2016

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 மாதங்கள் தங்கியிருந்த ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.

எதிர்காலத்தில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படவுள்ள விண்வெளி வாகனங்களுக்கு ஒரு தளத்தை நிறுவுதல் மற்றும் விண்வெளியில் டிஎன்ஏ மரபணு வரிசைமுறையை முதல் முறையாக பயன்படுத்துவது ஆகியவை இந்த விண்வெளி வீரர்களின் பணிகளில் உள்ளடங்கும்.

விண்வெளியில் இருந்த காலத்தில் தான் பணிச்சுமையுடன் மிகவும் பரபரப்பாக இருந்ததாகவும், இக்காலகட்டத்தில் பூமியில் என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என்று கூறிய இந்த விண்வெளி வீரர்களின் தலைவரான ரஷ்யாவின் அனாடோலி இவானிஷின், இக்காலகட்டத்தில் பூமியில் நடந்த நிகழ்வுகள் நல்லதாகவே நடந்திருக்கக் கூடும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

_92150859_anatoly

Related posts: