நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை பூமி இருளாகுமா?

Sunday, October 1st, 2017

15 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் என வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை புவியில் இருள் சூழவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் இருள் சூழவுள்ளதாக நாசா அறிவித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன.

எவ்வாறாயினும் இவ்வாறான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.இவ்வாறான தகவல்கள் இதற்கு முன்னரும் வெளியாகியதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

Related posts:


கடல் வழியாக சட்டவிரோதமாக வடபகுதிக்கு வருவோரால் வடக்கில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் – எச்சரிக்கிறத...
இன்றுமுதல் பெப்ரவரி 04 ஆம் திகதி வரை தினசரி மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை - கு...
கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சி...