தென் கொரியாவில் கலக்ஸி நோட் 7 விற்பனை ஆரம்பம்!
Saturday, October 1st, 2016
ஒரு மாதத்திற்குப் பிறகு தென் கொரியாவில் சாம்சங் நிறுவனமானது அதன் கேலக்ஸி நோட் 7 கைபேசி விற்பனையை மீண்டும் தொடங்கி உள்ளது.
கேலக்ஸி நோட் 7 வாடிக்கையாளர்கள் கைபேசி வெடித்ததாக சொல்லப்பட்ட தகவலைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கைபேசியின் விற்பனையைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. கைபேசி தீப்பிடிக்க அதன் பேட்டரியில் உள்ள பிரச்சினையே காரணம் என்று சாம்சங் தெரிவித்திருந்தது.
உலகம் முழுவதும் சுமார் 2.5 மில்லியன் கைபேசிகள் பாதுகாப்பான பேட்டரிகளை பொருத்துவதற்காகத் திரும்பப் பெறப்பட்டன.விமான நிறுவனங்கள், பயணத்தின் போது கேலக்ஸி நோட் 7 கைபேசியை இயக்க வேண்டாம் என்று பயணிகளை அறிவுறுத்தியிருந்தது.
பிரச்சினைக்குரிய பேட்டரிகள் அடங்கிய அனைத்து கேலக்ஸி நோட் 7 கைபேசிகளும் அதன் உரிமையாளர்களால் இன்னும் திருப்பி அளிக்கப்படாத நிலையில், விமான நிறுவனங்கள் கைபேசி மீதான தடையை எவ்வளவு விரைவாக விலக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

Related posts:
|
|
|


