தானியங்கி கார் விபத்து தொடர்பில் விசாரணை!

Friday, July 1st, 2016

அமெரிக்காவில் தானாக இயங்கும் ஓட்டோ பைலட் வசதி கொண்ட மின்சார கார் விபத்துக்குள்ளாகி அதனால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பாக, அதிகாரிகள் விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர்.

தெஸ்லா என்ற அந்த நிறுவனத்தின் மின்சார காரில் ஓட்டோ பைலட் வசதி உள்ளது. அதன் மூலம், சாலையில் பயணிக்கும்போது, அந்த பைலட் தானாகவே தடங்களை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தது. கடந்த மே மாதம் ஃபுளோரிடா மாகாணத்தில் அந்தக் கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே டிராக்டர்- டிரெய்லர் சென்றதை, ஓட்டோ பைலட்டும், ஓட்டுநரும் கவனிக்கத் தவறியதால் விபத்து ஏற்பட்டது.

இதுதொடர்பாக, தெஸ்லா நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், தானாக இயங்கக்கூடிய தொழில்நுட்பத்தை இயக்கி வைக்கும் அதே நேரத்தில், ஓட்டுநரும் அவருக்கான இருக்கையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Related posts: