தாஜ்மஹாலைப் பற்றிய அறியாத உண்மைகள்!

Wednesday, December 7th, 2016

உலகில் தாஜ் மஹாலை விரும்பாதவர்கள் என்று ஒருவர் கூட இருக்க மாட்டோம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு வரலாற்று சின்னம் மற்றும் காதலின் சுவாசம் பேசும் காதலர்களின் கோவில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இவ்வாறான தாஜ்மஹாலை விரும்பும் நமக்கெல்லாம் தாஜ்மஹால் சாஜஹானால் கட்டப்பட்டது என்றுதான் தெரியும். மாறாக அதனை கட்டிய சாஜஹானின் பின்னனி உங்களுக்கு தெரியுமா?. அந்த வகையில் தாஜ்மஹால் பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்கள்.

இந்தியாவின் ஆக்ரா இராச்சியத்தின் மிகப்பெரிய சக்கரவர்த்தி அக்பரின் வழியில் வந்த மாபெரும் சக்கரவர்த்தி சாஜஹான்.

கி.பி 1628 தொடக்கம் 1658 ஆம் ஆண்டு வரை ஆக்ரா இராட்சியத்தின் மாபெரும் மன்னனாக ஆட்சி செய்த சாஜஹான் தனது வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை கட்டடக்கலைக்கே செலவிட்டார்.

மிகுந்த திறமைசாலியாக காணப்பட்ட சாஜஹானின் முதல் மனைவி மும்தாஜ் அல்ல சாஜஹானின் மூன்றாவது மனைவிதான் மும்தாஜ்.

அதேபோன்று மும்தாஜின் நான்காவது கனவன்தான் சாஜஹான். தனது அரண்மனையில் பணிப் பெண்ணாக பணிபுரிந்த மும்தாஜை விரும்பி திருமணம் செய்துக்கொண்டார் சாஜஹான்.

மும்தாஜ் இறந்தது அவளது 16 வது பிரசவத்தின் போதே ஆகும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

தான் மும்தாஜ் மீது கொண்ட அன்பு அளப்பரியது அவளுக்காகவே மிகப்பெரும் மாளிகையை உருவாக்குவேன் என சாஜஹான் கொண்ட சபதம் தான் பின்னாளில் உருவான தாஜ்மஹால்.

இருப்பினும் மும்தாஜின் மரணத்தின் பின்பு அவளின் தங்கையையும் திருமணம் செய்துக் கொண்டாராம் சாஜஹான்.

மும்தாஜ்மஹாலை உருவாக்க வேண்டும் என்பதற்காக உலகெங்கும் தேடி பல்லாயிரக்கணக்கான பளிங்கு கற்களையும் பல்லாயிரக்கணக்கான வேலையாட்களையும் தேடி பணியில் அமர்த்தினார்.

மொத்தம் 20000 வேலையாட்களைக் கொண்டு 21 வருடங்கள் கட்டப்பட்டது தாஜ்மஹாலாகும்.

தாஜ்மஹாலின் பணிகள் நிறைவடைந்ததும் அதனை கட்டியவரை அழைத்த சாஜஹான் பெருந்தொகையான பரிசில்களை வழங்கி அவரின் கையையே துண்டித்து விட்டாராம்.

நாட்கள் செல்ல செல்ல தாஜ்மஹால் மீது மிகுந்த மோகம் கொண்டவராகவே மாறிய சாஜஹானை தனக்கு ஆட்சி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் சிறை வைத்தார் அவரது மகன் ஔரங்க சீப்.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாராம் ஆக்ரா பேரரசன் .

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

தனியறையில் பூட்டப்பட்டு தாஜ்மஹால் மட்டுமே தெரியக்கூடிய வகையில் துவாரமிட்டு இருட்டறையில் சிறைவைக்கப்பட்ட சாஜஹானை பார்ப்பதற்கு அவளது மகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டாள்.

தான் இறந்த பின்பு தாஜ்மஹாலுக்கு அருகிலேயே தனக்கும் அதேபோன்றொரு பளிங்கு மாளிகை கட்டவேண்டும் என தன் மகனிடம் கோரிக்கை விடுத்தார் சாஜஹான்.

ஆனால் தன்னால் அவ்வாறு மாபெரும் மாளிகை கட்டி மேலும் 20 வருடத்தை வீணடிக்க முடியாது எனக் கூறிய ஔரங்கசீப் வேண்டுமென்றால் தாஜ்மஹாலின் ஏதேனும் சிறிய இடத்திலேயே தங்களை நல்லடக்கம் செய்வதாக கூறி மறுத்து விட்டாராம்.

கட்டடக்கலையிலே தன் கவனத்தை செலுத்தி தாஜ்மஹாலே உயிரென்று வாழ்ந்து இறுதியில் தாஜ்மஹாலை பார்த்த வண்ணமே உயிர் விட்டாராம் மொகலாய பேரரசன் சாஜஹான்

Related posts: