தற்கொலை செய்ய விரும்பியவர்களை கொலை செய்த டுவிட்டர் கொலையாளி!

Saturday, November 18th, 2017

தற்கொலை செய்ய விரும்புவர்களை டுவிட்டரில் தொடர்பு கொண்டு அவர்களை கொலை செய்த கொலையாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜப்பானில் உள்ள ஜமா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒன்பது பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், தகாஹிரோ ஷிராஷி என்ற 27 வயது நபர், தற்கொலை எண்ணம் உடையவர்களை தொடர்புகொண்டு, உங்களுக்கு நான் உதவி செய்கிறேன் என்றும் உங்களுடன் சேர்ந்து நானும் இறந்துவிடுகிறேன் என கூறியுள்ளார்.இவனது பேச்சை கேட்டு தற்கொலை செய்ய விரும்பியவர்களை தனது வீட்டில் வைத்து கொலை செய்துள்ளான்.

தற்போது இந்நபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு கொலையை செய்த காரணத்தால், இந்த நபரை டுவிட்டர் கொலையாளி என்றே அழைக்கின்றனர். இது தமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே கூறியுள்ளார்.எங்கள் சேவையை நேர்மறையாகவும் நல்ல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த வேண்டும் எனும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related posts: