தட்டையானதுதான் பூமி: நிரூபிக்கும் முயற்சியில் நபர்!

Friday, November 24th, 2017

அமெரிக்காவின் மைக் ஹீக்ஸ் என்பவர் பூமி தட்டையானது என நிருபணம் செய்ய தானே தயாரித்த இராக்கெட்டில் பயணிக்க உள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைச் சேர்ந்தவர் மைக் ஹீக்ஸ். புதிய ராக்கேட் ஒன்றை சொந்தமாக தயாரித்துள்ள மைக் ஹீக்ஸ் அதன் மூலம் உலகம் தட்டையானது என நிரூபணம் செய்ய போவதாக கூறியுள்ளார்.

1800 அடியில் செலுத்தபடவுள்ள அந்த ராக்கேட் 800 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த ராக்கேட்டில் பயணம் செய்யவுள்ள மைக் மேலே சென்றவுடன் பூமி தட்டையானது என நிரூபணம் செய்ய தேவையான புகைப்படங்கள், ஆதாரங்களை சேமித்துக்கொண்டு கீழே வரவுள்ளார்.

இதற்கு முன் 2014 ஆம் ஆண்டில் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்ட மைக் தயாரித்த ராக்கேட் வானில் செலுத்திய சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொருங்கியது. இரண்டாவது முறையாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள மைக் பேசுகையில் ‘அறிவியலில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், எல்லாமே ஃபார்முலா தான் சரியான ஃபார்முலாவை பயன்படுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். மேலும் நான் கண்டிப்பாக பூமி தட்டையானது என்பதை நிரூபணம் செய்வேன்’ எனவும் கூறினார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: