தகவலக்கு ரூ.10000 பரிசு!

Thursday, May 12th, 2016

இலங்கையில் அழிவடைந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக சிறுத்தை இனங்களை கொல்பவர்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு, 10,000 ரூபாய் பணப் பரிசு வழங்கப்படும் என அகில இலங்கை வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ‘சிறுத்தைகளை கொலை செய்வோர் மற்றும் துன்புறுத்துவோர் தொடர்பில் 0716868303 அல்லது 0718114492 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக் கொண்டு அறிவிக்க முடியும்’ என்று அச்சங்கம் கூறியது.

‘நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் குறுகிய காலப்பகுதிக்குள் 10 சிறுத்தைகள் கொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக  ஹட்டன், நோர்வூட் மற்றும் அக்கரபத்தனை போன்ற பிரதேசங்களின் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்து வரும் சிறுத்தைகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளன’ எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: