செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்!
Thursday, September 29th, 2016
இன்றைய அறிவியலின் நவீன வளர்ச்சியில் எல்லாமே சாத்தியம் என்றாகி விட்டது.அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் குடியிருப்புகளை கட்ட போவதாக டெஸ்ஸா மோட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து டெஸ்ஸா மோட்டர்ஸ் நிறுவன தலைவர் எலன் மஸ்க் கூறுகையில், 2022 இல் செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம்.சோலார் போன்ற மாற்று எரிபொருளால் அமைக்கப்பட்ட விண்வெளி வாகனத்தில் மக்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், முதலில் நூறு பேரை மட்டுமே அனுப்ப திட்டமிட்டுள்ளோம். பின்னர் படிப்படியாக ஒரு மில்லியன் மனிதர்களை அடுத்த நூறு ஆண்டுகளில் அனுப்ப முடிவு செய்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை அடைய எண்பது நாட்கள் ஆகும் என்றும் அதற்கு 2,00,000 ரூபாய்கள் டிக்கெட் விலையாக இருக்கும் என்றும் செவ்வாயிலிருந்து பூமிக்கு திரும்ப முன் பதிவு செய்தோருக்கு டிக்கெட் கட்டணம் இலவசமாக இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. டெஸ்ஸோ மோட்டர்ஸ் நிறுவனர் எலன் மாலிக், அடுத்த இருபது ஆண்டுகளில் எண்பதாயிரம் பேரை செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற உள்ளோம் என 2012 ஆம் ஆண்டே கூறியது குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


