செயற்கை முறையில் விழித்திரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!

Tuesday, March 14th, 2017

இயற்கையாக உண்டாகும் கண்பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குவது விழித்திரைப் பாதிப்பு ஆகும். இதனால் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையிலும், எதிர்காலத்தை தரக்கூடிய வகையிலும் கண்டுபிடிப்பு ஒன்றினை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர்.அதாவது செயற்கையான முறையில் விழித்திரையினை உருவாக்கி சாதித்துள்ளனர்.

கண்ணின் பிற்பகுதியில் காணப்படும் விழித்திரையிலேயே விம்பங்கள் பதிக்கப்படும்.இவ்வாறு விம்பங்கள் பதிக்கப்படுகையில் ஏற்படும் குறைபாடு காரணமாகவே அதிகளவானவர்களுக்கு பார்வைக் குறைபாடு உண்டாகியுள்ளது.

எனினும் செயற்கை விழித்திரையினூடாக அவர்களின் கண்பார்வையை மீட்டெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதனை இத்தாலியிலுள்ள Institute of Technology நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்றே உருவாக்கியுள்ளது.

Related posts: