சூரிய சக்தியை மணலில் சேமித்து வைக்க புதிய தொழில்நுட்பம்!

Wednesday, August 17th, 2016

சூரிய சக்தியை மணலில் சேமித்துவைக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஐக்கிய அரபு ​இராச்சிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான இடம் பாலைவனமாக இருப்பதால், அங்கு சூரிய சக்தியை பிரதான எரிசக்தியாகப் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.அந்தவகையில் இதுகுறித்த ஆய்களில் ஈடுபட்டுள்ள மஸ்தார் கல்விநிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய சக்தியை மணலில் சேமிக்கும் சேண்ட்ஸ்டாக் எனும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இதன்மூலம், சூரிய சக்தியினை மணலில் சேமித்து இரவிலும் பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related posts: