சீனாவில் ”டிராம் பஸ்” சோதனை ஓட்டம் வெற்றி!

Friday, August 5th, 2016

சீனாவில் போக்குவரத்து நெரிசலில் குறைப்பதற்காக கடந்த மே மாதம் சீனாவில் ஒரு பிரம்மாண்ட பஸ் அறிமுகம் செய்யப்பட்டது. லேண்ட் ஏர்பஸ் என்று அழைக்கப்படும் இந்த பஸ்  சீனாவை சேர்ந்த டிரான்ஸ்போர்ட் எக்ஸ்ப்ளோரர் பஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

சீனாவின் கின்ஹுவாங்டாவ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 300 மீட்டர் நீளமுடைய சோதனை ஓட்ட தடத்தில் இந்த பஸ் இயக்கி ஆய்வுகள் செய்யப்பட்டன. இந்த பஸ்சில் 300 பேர் முதல் 1,400 பேர் வரை பயணிக்க முடியும்.இந்த பஸ்சை மணிக்கு 60 கிமீ வேகம் வரை இயக்க முடியும். இந்நிலையில் தற்போது இந்த பஸ்சின் சோதனை ஓட்டம் நடந்தது. சோதனையின் போது ஸ்டார்ட் செய்வது, பிரேக் உள்ளிட்டவைகள் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. தற்போது டிரைவருடன் இந்த பஸ் இயக்கப்படுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாதாரண சாலையில் வைத்து இந்த பஸ்சை இயக்க சீன போக்குவரத்து கழகத்திடம் அனுமதி கோர இருக்கின்றனர்.  இந்த பஸ்சின் கீழ் பகுதியில் கார்கள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல முடியும். வருங்காலத்தில் டிரைவர் இல்லாமல் தானாக இயங்குவது குறித்து இந்த பஸ்சை இயக்க வைக்க வல்லுனர்கள் அதற்கான முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் மத்தியில் டிராம் பஸ் வரவேற்பு கிடைத்துள்ளது.

Related posts: