சீனாவின் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு!

சீனாவில் உள்ள ஒரு சிவன் கோவிலில் தமிழ் எழுத்துகளால் ஆன அபூர்வ கல்வெட்டு இருப்பது ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டில் உள்ள காண்டன் என்னும் நகரின் அருகே சூவன்செள் (Shauan Chou) என்னும் துறைமுக நகர் உள்ளது. இந்த காண்டன் நகரில் வணிகம் தொடர்பாக அந்தக் காலத்திலிருந்தே பல தமிழர்கள் அங்கே வாழ்ந்து வந்துள்ளனர்.
அந்த துறைமுக நகரில் சிவன் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. கி.பி 1260ஆம் ஆண்டில் ஒரு சித்திரா பவுர்ணமி தினத்தில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்த கி.பி 1260ஆம் காலகட்டத்தில் அந்த இடங்களை குப்லாய்கான் என்னும் அரசன் ஆண்டு வந்துள்ளான். அவருக்கு உடல் நிலை சம்மந்தமான பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும், ஒரு சிவன் கோவில் கட்டினால் பிரச்சனை சரியாகும் என குப்லாகானுக்கு ஆலோசனை வழங்கபட அவரின் ஆணையின் பேரில் அந்த சிவன் ஆலயம் நிறுவப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆலயமானது திருகாதாலீஷ்வரம் என அழைக்கப்படுகிறது.
இந்த சீன சிவன் ஆலயத்தில் ‘சீன சக்கரவத்தியான குப்லாய்கான் ஆணையின் கீழ் கட்டப்பட்டது’ என்ற வாசகம் கல்வெட்டாக தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.தமிழ் எழுத்து வரிகள் கீழே கடைசி வரி சீன மொழியான சைனீஸ்ஸில் பொறிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் இது மிக அபூர்வமான கல்வெட்டாக கருதப்படுகிறது.
Related posts:
|
|