சாம்சங் கலக்ஸி நோட் 7 தொலைபேசி விமானங்களில் பயன்படுத்த அனுமதியில்லை!
Saturday, September 10th, 2016
புதிய சாம்சங் கலக்ஸி நோட்7 தொலைபேசியை இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் பயன்படுத்துவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தடை விதித்திருக்கிறது.
பல நாட்டு விமான நிறுவனங்கள் இந்தத் தடையை ஏற்கெனவே விதித்திருக்கும் நிலையில் தற்போது இந்தியாவும் தடை விதித்துள்ளது.விமானத்தில் பயணிக்கும்போது, சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்பேசியை இயங்கும் நிலையில் வைத்திருக்கவோ அல்லது மின்னூக்கி ஏற்படுத்தவோ வேண்டாம் என்று முன்னதாக அமெரிக்க அதிகாரிகளும் எச்சரித்து இருக்கின்றனர்.
பயணியர் எடுத்துச் செல்கின்ற பைகளில் அதனை வைக்காமல் இருக்க அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.மின்னூக்கி அளிக்கும்போது அல்லது அதற்கு பின்னர் இந்த செல்பேசி வெடித்து எரிந்து விடுவதாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், விற்பனை செய்த அனைத்து செல்பேசிகளையும் திரும்பப் பெறுவதாக சாம்சங் அறிவித்தது.
மேலும், ஜப்பான், கான்டாஸ் மற்றும் வெர்ஜின் ஆஸ்திரோலியா விமான நிறுவனங்களும் பயணியர் விமானத்தில் பயணிக்கின்றபோது இந்த செல்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களிடம் கேட்டுகொண்டுள்ளன.இந்தியாவின் தடை குறித்து, சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கேலக்ஸி நோட் 7 செல்பேசி விற்பனை தொடங்கப்படவில்லை என்றும் சாம்சங் நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான கவனங்களை போக்குவதற்காகவே இந்தியாவில் விற்பனையை தள்ளிப்போட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை குறைக்கக் கூடிய வகையில், மிக விரைவாக கேலக்ஸி நோட் 7 செல்பேசிகளை புதிதாக அனுப்ப இருப்பதாக அது தெரிவித்திருக்கிறது. பாதுகாப்பு கவனங்களை நீக்கிவிடும் வகையில் திரும்ப பெறுகின்ற கேலக்ஸி நோட் 7-க்கு பதிலாக வழங்கும் புதிய செல்பேசிகளை இரண்டு வாரங்களில் வழங்கப் போவதாக சாம்சங் தெரிவித்திருக்கிறது.
கடந்த மாதம் வெளியான இந்த செல்பேசி வாடிக்கையாளர்களிடம் பொதுவாக மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.இதுவரை 25 லட்சம் கேலக்ஸி நோட் 7 சாதனங்கள், உலக அளவில் விற்பனையாகி உள்ளன.

Related posts:
|
|
|


