கூகுளின் ஸ்மார்ட்  போன் பிக்ஸல் அறிமுகம்!

Thursday, October 6th, 2016

கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் ஃபோன் பிக்ஸல் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் நிறுவனம் மொட்டரோலா மற்றும் நெக்சஸ் போன்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முயற்சியாக பிக்ஸல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் அறிமுக விழா இடம்பெற்றது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் இன்று முதல் கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் எக்ஸல் ஃபோன்கள் விற்பனைக்கு வருகின்றன. டே ட்ரீம் வெர்ச்சுவல் ரியாலிட்டி எனும் கருவி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை நேரடியாக கண்களில் பொருத்திக்கொண்டு தொழில்நுட்பத்தை அனுபவிக்கலாம். யூ ட்யூப், மேப் ஸ்ட்ரீட் வியூ, 360 டிகிரி வீடியோ ஆகியவற்றிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்ஸல் பயன்பாட்டாளர்கள் அளவற்ற கூகுள் ஃபோட்டோஸ் பயன்பாட்டடைப் பெற முடியும்.

மேலும், விரைவாக மின்னூட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் 15 நிமிடம் சார்ஜ் ஏற்றினாலே 7 மணி நேரம் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பிங்கர் பிரிண்ட் சென்சார்” வசதியும் இதில் உள்ளது. இந்தியாவில் வரும் 13 ஆம் திகதி முதல் இதன் விற்பனை ஆரம்பமாகவுள்ளதுடன் 57,000 இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

smartphonepixel-05-1475612282

Related posts: