குறையை கண்டுபிடித்தவருக்கு 10 லட்சம் பரிசு!
Friday, March 11th, 2016
சமூக வலைத்தளமான Facebookஇல் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த பெங்களூரை சேர்ந்த ஹேக்கருக்கு Facebook நிர்வாகம் ரூ.10 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.
பிளிப்கார்ட்டில் பணிபுரியும் ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் பிற கணினிகளில் அனுமதியில்லாமல் நுழையும் ஒரு ஹேக்கரும் கூட. இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான Facebookஇல் log in செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார்.
Facebookஇன் இந்த குறையை பயன்படுத்தி Facebookஇல் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும்.
Facebookஇன் இந்த குறையை கண்டுபிடித்து அந்த நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார் ஆனந்த் பிரகாஷ். இதனையடுத்து Facebookஇல் இருந்த குறையை சரி செய்துள்ளது அந்த நிறுவனம்.
மேலும் Facebook குறையை கண்டுபிடித்த ஆனந்த் பிரகாஷ்க்கு 15000 டாலர் அறிவித்துள்ளது Facebook நிறுவனம். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10 லட்சம் ஆகும்
Related posts:
செவ்வாய் கிரகத்தில் நீர்!
Verizon இன் அதிரடி அறிவிப்பு!
சந்திரனின் மேற்பரப்பில் குழிகள் – கண்டறிந்தது சீனாவின் விண்ணாய்வு கருவி!
|
|
|


