குறைந்த செலவில் இரும்புக்கு இணையான மரப் பலகை உருவாக்கம்!

தற்போது காணப்படும் பலம் வாய்ந்த மரப் பலகைகளை விடவும் 10 மடங்கு பலம் வாய்ந்த மரப் பலகையை உருவாக்கும் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இச் செயற்கை பலகையானது இரும்பிற்கு இணையான வலிமை உடையதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். கார்பன் பைபர் மற்றும் ஸ்டீல்கள் என்பன வலிமை மிகுந்தவையாயினும் அவற்றினை உருவாக்குவதற்கான செலவு அதிகம்.
ஆனால் இப் புதிய மரப் பலகையினை உருவாக்குவதற்கு மிகக் குறைந்த செலவு போதுமானது. விரைவில் இச் செயற்கை பலகையையும், வழமையான இயற்கை பலகையையும் துப்பாக்கிச் சூட்டு பரிசோதனைக்கு உள்ளாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
Related posts:
5 லட்சம் கார்களை திரும்பப் பெறவுள்ளதாக டொயோட்டா நிறுவனம் அறிவிப்பு!
டுவிட்டர் தனது 3.6 இலட்ச கணக்குகளை முடக்கியது !
வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது?
|
|