கின்னஸில் இடம்பிடித்த 60 வயதான ஒராங்குட்டான் குரங்கு!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 60 வயதான ஒராங்குட்டான் குரங்கு உலகின் மிக வயதான ஒராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சிசாலையில் உள்ள இந்த ஒராங்குட்டானின் பெயர் பான். நேற்று தனது 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய பான் மிக வயதான ஒராங்குட்டான் என கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
மலேசியா நாட்டில் 1956 ஆம் ஆண்டு பிறந்த பான் அங்குள்ள சுல்தான் ஜோகூர் என்ற மிருகக்காட்சிசாலையிலிருந்து 1968 ஆம் ஆண்டு இந்த பெர்த் மிருகக்காட்சிசாலைக்கு அன்பளிப்பாக வந்து சேர்ந்தது.
பொதுவாக ஒராங்குட்டான் வகை குரங்குகள் 50 வயதிற்கு மேல் உயிர் வாழாது என்பதால் பானின் இந்த பிறந்த நாளை பெர்த் மிருககாட்சிசாலை ஊழியர்கள் விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர். இந்த ஒராங்குட்டான் இன்னும் 10 ஆண்டுகள் உயிர்வாழும் என மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் கணித்துள்ளனர்.
Related posts:
|
|