‘ஓ’ இரத்தப் பிரிவினருக்கு மாரடைப்பு வராதாம்

Friday, May 5th, 2017

ஓ” பிரிவு இரத்தப் பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் மிக குறைவு என புதிய தகவல் தெரியவந்துள்ளது.

மாரடைப்பு கொடிய நோயாகும். அதனால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அதை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுக் கடை பிடிக்கப்படுகின்றன. இந்த நிலையில் எந்த வகை இரத்தப்பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் ஏற்படும் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் நெதர்லாந்தில் குரோனிங் ஜென் என்ற இடத்தில் உள்ள தேசா கோலே பல்கலைக்கழகத்தின் மருத்துவமைய நிபுணர்களின் ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒ  குரூப் ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் மிக குறைவு என தெரிய வந்துள்ளது. அதே நேரம் ஏ.பி., மற்றும் ஏபி பிரிவு இரத்தப்பிரிவினருக்கு 9 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மாரடைப்பு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: