ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகம்!

Wednesday, August 17th, 2016

ஓட்டுநர் இல்லாத கார் இன்னும் 5 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும் என ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

கார் தயாரிப்பில் முன்னணியிலுள்ள நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டிருந்ததாவது, வர விருக்கும் 2021ல் ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் கார் அறிமுகப்படுத்தப்படும் எனவும், முதலில் இந்த கார் வர்த்தக பயன்பாடுகளுக்கும் பின்னர் பொது மக்கள் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படும் என்றும் ஃபோர்டு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஃபீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் டெஸ்லா மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் ஓட்டுநர் இல்லாத காரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: