ஒளியை தாமாகவே பிறப்பிக்கும் பவளப்பாறைகள்!

சூரிய ஒளிக்கு பதிலாக தாமே ஒளியைப் பிறப்பித்து தம்மைத் தாமே உயிர்பிழைக்கச் செய்கின்ற சில வகையான பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஆழமான பகுதிகளில் அல்காக்கள் உணவு தயாரிப்பில் ஈடுபடவும் உதவியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவுத்தாம்ரன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளன. சூரிய ஒளியானது சமுத்திரங்களில் அதிகபட்சமாக ஏறத்தாழ 200 மீற்றர்கள் ஆழத்திற்கே ஊடுருவும். எனவே இதனை விடவும் ஆழமான பகுதிகளில் காணப்படும் பவழப்பாறைகள் சுய ஒளியைப் பிறப்பித்து உயிர்வாழ்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உணர்ச்சிகளைக் கண்டறியும் இலத்திரனியல் கைப்பட்டி அறிமுகம்!
இலங்கையைக் கடக்கும் விண்வெளி மையம்!
வீதியில் தொலைபேசி பார்த்தால் தண்டப்பணம்- அமுலாகியது சட்டம்!
|
|