ஒரே புள்ளியில் அனைத்து நிறங்களையும் குவிக்கும் புதிய லென்ஸ் கண்டுபிடிப்பு!

Sunday, January 7th, 2018

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அனைத்து நிறங்களையும் ஒரே புள்ளியில் குவிக்கும் புதிய லென்ஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த லென்ஸ் மூலம் வெள்ளை உள்ளிட்ட அனைத்து வண்ணங்களில் உள்ள ஒளிக்கற்றைகளையும் ஒரே குறிப்பிட்ட புள்ளியில், அவற்றின் செறிவு குறையாமல் குவிக்க முடியும்.

இதற்கு முன்னதாக பல லென்ஸ்களின் உதவியுடன் இதனைச் செய்யும் வகையில் இருந்ததாகவும், ஒரே லென்ஸ் மூலம் நிறங்களைக் குவிப்பது தற்போதுதான் சாத்தியமாகியுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: