ஒன்பது பேருக்காக மட்டும் ஒரு கிராமம்!

Tuesday, April 19th, 2016

டென்மார்க் அருகே ஃபாரோ தீவுகளில் பனி மூடிய மலைகளின் நடுவே அமைந்துள்ள குட்டி கிராமம் ஒன்றில் மொத்தமாக ஒன்பதே பேர் தான் குடியிருந்து வருகின்றனர்.

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தீவு கூட்டங்களில் இந்த ஃபாரோதீவும் ஒன்று. மட்டுமின்றி சுரங்கப்பாதைகள், பாலங்கள், படகு போக்குவரத்து என இங்குள்ள 18 எரிமலைத் தீவுகளும் இணைக்கப்பட்டே உள்ளது.

இங்குள்ள மக்கள் குடியிருக்கும் வீடுகளும் தனித்தே காணப்படுகிறது. சிறுவர்கள் கணினி விளையாட்டில் நேரத்தை போக்குகின்றனர். முதியவர்கள் பெருபாலும் தனிமையையே விரும்புகின்றனர்.

இங்குள்ள சில கிராமத்தில் 22 நபர்கள் வரை குடியிருந்து வருகின்றனர். Mykines கிராமத்தில் 10 பேர் மட்டும் வசிக்கின்றனர்.

இந்த தீவு கூட்டத்தில் உள்ள கிராமங்களில் வெளி உலகம் போன்று வசதிகள் இல்லை என்ற போதும் மக்கள் அமைதியாகவும் நிறைவுடனும் வாழ்க்கையை நடத்துகின்றனர்

Related posts: