ஐந்து பில்லியன் வருடங்களுக்குள் சூரியன் 100 மடங்கு பெரிதாகும்!

Monday, December 12th, 2016

ஐந்து பில்லியன் வருடங்களுக்குள் சூரியன் 100 மடங்கு பெரிதாகும் எனவும் இதனால் பூமியின் அழிவு நிச்சயம் நெருங்கி வருகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கைக்கு மாறாக பல வினோதங்கள் நடைபெற்று வரும் இவ்வுலகில் பல மாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதனால் இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சூரியன், ‘மஞ்சள் குள்ளன்’ என்ற தரத்தில் இருந்து தீவிரமடைந்து 100 மடங்கு பெரிதாகி ‘சிவப்பு இராட்சதன்’ என்ற நிலையை அடையவுள்ளது.

இதையடுத்து, பூமி பேரழிவை சந்திக்கும் ஆபத்து நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர்.இத்தகைய நிகழ்வுகளால் சூரியன் உயிர்களை சுட்டெரிக்கும் அளவிற்கு வெப்பத்தை உமிழும் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சூரியனிற்கு மிக அருகில் உள்ள புதன், வெள்ளி போன்ற கிரகங்களை விழுங்கும் ஆபத்து உள்ளது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

sun__large

Related posts: