உலக கரப்பந்தாட்ட போட்டிகளுக்கு தயாராகும் இலங்கை!

Monday, January 16th, 2017

2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச கரப்பந்தாட்ட போட்டிகள் பலவற்றில் வீரர்களைக் கொண்ட குழுக்களை ஈடுபடுத்த இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் தயாராகியுள்ளது.இதற்காக 28 பேரைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவிலுள்ள வீரர்களுக்கு ஹெய்யந்தொடுவ பயிற்சி மத்திய நிலையத்தில் இரண்டு வாரகால பயிற்சி வழங்கப்படவுள்ளதாக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எஸ்.நாலக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மியன்மாரில் நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டியில் இலங்கை அணி கலந்து கொள்ளவுள்ளது.மே மாதத்தில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள 23 வயதிற்குட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டியில் அணியொன்று கலந்து கொள்ளவுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

23 வயதிற்குட்பட்ட அமைப்புக்கான தெரிவு ஆரம்பமாகியுள்ள நிலையில் இக்குழுவினருக்கு ரொறின்டனில் ஆரம்ப பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

f6d59b82fb8ae893e7a72ce94e13c5d7_XL

Related posts: