உலகத்தையே திரும்பிப்பார்க்க வைக்கும் மனிதராக மோடி இருப்பார் – எதிர்வு கூறிய நாஸ்ட்ராடாம் !

Wednesday, December 14th, 2016

மேலை நாட்டு தீர்க்க தரிசிகளில் முக்கியமானவர்  16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்ட்ராடாமுஸ். இவரது கணிப்புகள்  கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் உள்ளன.

சாதாரண  ஜோதிடம் பயின்ற இவர் அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் பல பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டர்டாம்ஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம்.

நாஸ்ட்ராடாமுசின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.

மோடி இந்தியாவின் பிரதமராவார் என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை இந்திய நாட்டை ஒரு நடுத்தர வயது மதிக்கத்தக்க மனிதர் ஆட்சி செய்வார். அவரை தொடக்கத்தில் மக்கள் வெறுப்பார்கள். ஆனால், அவரால் நாட்டில் நடக்கும் மாற்றங்களால் அவர் போற்றப்படுவார்,மதிக்கப்படுவார்.

மிகவும் சக்தி வாய்ந்த ஆட்சித்திறனும்,ஆளுமையும் கொண்ட அவர் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்தையே திரும்பிப்பார்க்க வைக்கும் மனிதராக இருப்பார். உலகின் பல நாடுகள் இந்தியாவை நாடி இருக்கும் நிலை உருவாகும் என்று பிரெஞ்ச் ஜோதிடர் நாஸ்ட்ராடாமுஸ் என்பவரால் 1555ம் ஆணடில் எழுதப்பட்ட நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஆச்சர்யத்தை அளிப்பதாகவே உள்ளது. 1555ம் ஆண்டு என்றால் கிட்டத்தட்ட 460 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இவ்வாறு கணித்து எழுதியுள்ளார்.

அந்த கருத்தை எடுத்து தற்போதைய இந்திய பிரதமர் மோடிக்கு ஒப்பிட்டு பார்க்கும்போது அது சரியாகவே பொருந்தி வருகிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. ஆனாலும் கூட எதிர்காலத்தில் நடக்கும் நன்மைகளால்அந்த துன்பங்கள் மறைந்து போகலாம்.

இந்தியா பிரமாண்ட வளர்ச்சி பெற்ற நாடாக மாறும். உலக நாடுகளே இந்தியாவை திரும்பிப்பார்ப்பதுடன், இந்தியாவின் உதவியை உலக நாடுகள் நாடி இருக்கும் நிலை வரும். இந்தியா குளோபல் மாஸ்டராக திகழும் என்று கூறப்பட்டுள்ளது.

201612141052429229_Nostradamus-predicted-Modis-rule-450-years-ago-believes_SECVPF

Related posts: