உலகில் மிகப் பெரிய வைரக்கலை ஏலத்தில் விற்க முடியவில்லை!

லண்டனில் நேற்று நடைபெற்ற ஏல விற்பனையில் உலகில் மிகப் பெரிய வைரக்கல்லை விற்பனை செய்ய முடியாது போயுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய வைரக்கல் என கருதப்படும் லாரோனா என்று பெயரிடப்பட்டுள்ள வைரக்கல் லண்டனில் நேற்று ஏலம் விடப்பட்டது.
ஏல விற்பனையில் வைரக்கல்லுக்கு அதிகபட்ச விலையை பெற முடியாத காரணத்தினால், அதனை விற்பனை செய்ய முடியாது போயுள்ளது.
போஸ்வானா நாட்டில் கடந்த நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரக்கல் ஆயிரத்து 109 கரட் எடை கொண்டது. இந்த வைரக்கல் 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது எனவும் கூறப்படுகிறது.
இதனை 70 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் ஏலத்தில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் 61 மில்லியன் அமெரிக்க டொலருக்கே ஏலம் கோரப்பட்டதாக தெரியவருகிறது.
Related posts:
செவ்வாய்க்கு செல்லும் சீனா விண்கலம்!
இராட்சத விண்கல்: பூமிக்கு ஆபத்து வருமா?
“குழந்தைகளை கொஞ்சுங்கள் - அவர்கள் மூளை நன்கு வளரும்”
|
|