இணைய உலகை ஆக்கிரமிக்க தயாராகும் பேஸ்புக்கின் அடுத்த முயற்சி!

Tuesday, November 22nd, 2016

ஏறத்தாழ 1.5 பில்லியன் வரையான பயனர்களை தன்னகத்தே கொண்ட மிகப்பெரிய சமூகவலைத்தளமாக திகழ்கின்றது பேஸ்புக். அத்துடன் முன்னணி இணையத்தளங்களின் வரிசையில் தற்போது மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றது.

இதேவேளை முதலம் இரண்டாம் இடங்களில் காணப்படும் கூகுள், யூடியூப் தளங்களுக்கு சவால் விடுவதற்கு தயாராகிவருகின்றது பேஸ்புக்.இதன் ஒரு கட்டமாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தனது நிறுவனத்தில் பணியாளர் அதிகரிப்பினை செய்யவுள்ளது.

அடுத்த வருடம் செய்யப்படவுள்ள இந்த பணி அதிகரிப்பின்போது 50 சதவீத எண்ணிக்கையினால் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.இதுபற்றி Nicola Mendelsohn என்பவர் கருதது தெரிவிக்கையில் “2007ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தின் கிளை ஐக்கிய இராச்சியத்தில் காலடி பதித்ததாகவும், அடுத்து வருடம் ஒரு தலைமைச் செயலகத்தை திறக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் அங்கு 1,500 பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்க தீர்மானித்துள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பின்தங்கிய இடங்களில் இணைய இணைப்பினை வழங்குவதற்கு ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தினை உருவாக்குவதிலும் பேஸ்புக் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: