உலகிலே மிகவும் நீளமானது சீனாவின் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை!

Monday, September 12th, 2016

உலகிலே நீளமான அதிவேக  புகையிரத (புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20,000 கிலோ மீட்டரைத் தாண்டியுள்ளது.

நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சூ நகரையும் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் சுசூ நகரையும் இணைக்கும் வகையில் புதிய பாதை அமைக்கப்பட்டது. இது நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.

360 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை, மிக முக்கியமான வடக்கு-தெற்கு பாதைகளை இணைக்கிறது. இதன்மூலம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கிடையிலான பயண நேரம் கணிசமாகக் குறைகிறது.

குறிப்பாக, ஜியான் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 11 மணியிலிருந்து 6 மணியாகக் குறையும். மொத்தம் 9 ரயில் நிலையங்களைக் கொண்ட இந்த வழித்தடத்தில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரயில் செல்லும்.

இதன்மூலம், சீனாவில் உள்ள அதிவேக ரயில் பாதையின் மொத்த நீளம் 20 ஆயிரம் கிலோ மீட்டரைத் தாண்டி உள்ளது. இதனால் உலகின் நீளமான அதிவேக ரயில் பாதையைக் கொண்ட நாடு என்ற பெருமை சீனாவுக்கு கிடைத் துள்ளது.

bulletrain_3006407f

Related posts: