உலகின் மிக நீளமான விமானம் தயாரிப்பு!

Tuesday, March 22nd, 2016

இங்கிலாந்தில் தயாராகியுள்ள உலகின் மிக நீளமான ஏர்லேண்டர் விமானத்தின் புதிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தற்கால நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட இந்த புதிய விமானம் 15 மீட்டர் அதிக நீளம் கொண்டதாகும்.

50 தொன் எடையுடன் ஆகாயத்தில் மட்டுமின்றி நீரிலும் இறங்கும் திறன் கொண்டது

ஏர்லேண்டர். ஹிலியத்தை எரிபொருளாக கொண்ட இந்த விமானம் 3 வாரங்களுக்கு ஆகாயத்தில் பறக்கும் திறன் கொண்டது.

கண்காணிப்புக்கும், அதிக அளவிளான சரக்குகளை எடுத்துச் செல்லவும், பயணிகளை ஏற்றிச் செல்லவும் இந்த விமானத்தை பயன்படுத்த முடியும்.

அமெரிக்க அரசுக்காக இந்த விமானத்தை 2009-ம் ஆண்டு முதல் தயாரிக்க தொடங்கியது ஹெச்.ஏ.வி நிறுவனம். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக இந்த ஒப்பந்தம் அமெரிக்க அரசால் ரத்து செய்யப்பட்டது.

கட்டுமானப் பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது

ஏர்லேண்டர். இதற்கு முன்னோட்டமாக ஏர்லேண்டர் விமானத்தின் புதிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டுக்குள் இதுபோல் 50 விமானங்களை தயாரிக்க ஹெச்.ஏ.வி நிறுவனம் திட்டமிட்டுள்ளது

Related posts: