உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம்!

வெகுவாகு குறைந்து வரும் உயிர்ச்சுவட்டு எரிபொருட்கள் காரணமாக இயற்கை முறையில் மின்சக்தியை உற்பத்தி செய்யும் முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
அதிலும் சூரிய சக்தியிலிருந்து மின்னை உற்பத்தி செய்வதற்கு உலகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.இதனால் பல நாடுகளிலும் மிகப் பரந்த பிரதேசத்தில் பிரம்மாண்டமான முறையில் சூரியப் படலங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இதேபோலவே சீனாவில் மிதக்கக்கூடிய சூரிய படலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சுமார் 40 மெகாவாட்ஸ் மின்னைப் பிறப்பிக்கக்கூடிய அளவில் இம் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெருமளவு நிலப்பரப்பினை மீதப்படுத்தி வேறு தேவைகளுக்காக பயன்படுத்த முடியும்.அத்துடன் சூழல் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்பதுவும் சாதகமாக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய இலத்திரனியல் சாதன அழிவுகளை குறைக்க முடியும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|