உலகின் கவனத்தை ஈர்த்த 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள்!

ஜெர்மனியை சேர்ந்த லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற அந்த சிறுவனின் ஓவிய ஆர்வத்தை அறிந்த அவனது பெற்றோர் சிறுவனுக்காகவே ஒரு பிரத்யேக ஸ்டூடியோவை ஒதுக்கி கொடுத்துள்ளனர்.
அதாவது சிறுவன் டைனோசர்கள், குதிரைகள் போன்ற விலங்குகளின் ஓவியங்களை அசத்தலாக வரைந்தான்.
சிறுவன் வரைந்த ஓவியங்களை பார்த்து வியந்த அவனது தாயார் லிசா மகனின் படைப்புகளை வெளிப்படுத்த இன்ஸ்டாகிராமில் தனி பக்கம் உருவாக்கினார்.
சிறுவன் வரைந்த ஓவியங்களை பதிவிட்டார். அவற்றை பார்த்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சிறுவனின் ஓவிய திறமையை பாராட்டி பதிவிட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முனிச்சில் நடந்த மிகப்பெரிய கண்காட்சியில் லாரண்டின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பிரபலமான அந்த சிறுவனின் ஓவியங்கள் 7 ஆயிரம் டொலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
000
Related posts:
ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் தகவல்களை வெளியிட்டது ஐரோப்பிய விண்வெளி முகமை!
ஸ்மார்ட் கைக் கடிகாரங்களுக்கான புதிய இயங்குதளம்!
நீங்கள் இருக்கும் இடத்தை 'காட்டிக்கொடுக்கும்' ஆண்ட்ராய்டு !
|
|