உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் – ஸ்பெய்ன், இத்தாலி வெற்றி!

Tuesday, November 15th, 2016

ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில், நேற்று சனிக்கிழமை (12), இடம்பெற்ற போட்டிகளில், முன்னாள் உலக சம்பியன்களான ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஸ்பெய்ன், மசிடோனியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வெற்றி பெற்றது. ஸ்பெய்ன் சார்பாக, விட்டோலோ, நாச்சோ மொன்றீயல், அரிட்ஸ் அடுரிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்ததோடு, “ஓவ்ண் கோல்” மூலம் மேலுமொரு கோல் பெறப்பட்டிருந்தது.

இத்தாலி, லிட்டின்ஸ்‌டைன் ஆகிய அணிகளுக்கான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தாலியின் கோல்கள் அனைத்தும் இரண்டாவது பாதியிலேயே பெறப்பட்டிருந்த நிலையில், அன்ட்றியா பெலொட்டி இரண்டு கோல்களையும் சிரோ இம்மொபைல், அந்தோனியோ கன்ட்ரேவா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

வேல்ஸ், சேர்பியா அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. வேல்ஸ்ச சார்பாக பெறப்பட்ட கோலை, கரித் பேல் பெற்றதோடு, சேர்பியா சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்டர் மிற்ரோவிக் பெற்றார்.

ஏனைய போட்டிகளில், குரோஷியா, 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வென்றது; அயர்லாந்துக் குடியரசு, 1-0 என்ற கோல் கணக்கில் ஒஸ்திரியாவை வென்றது; நைஜீரியா, 3-1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வென்றது; தென்னாபிரிக்கா, 2-1 என்ற கோல் கணக்கில் செனகலை வென்றது; துருக்கி, 2-0 என்ற கோல் கணக்கில் கொஸோவாவை வென்றது; உக்ரைன், 1-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்தை வென்றது; இஸ்ரேல், 3-0  என்ற கோல் கணக்கில் அல்பானியாவை வென்றது; நியூசிலாந்து, 2-0 என்ற கோல் கணக்கில் நியூ கலேடோனியாவை வென்றது; உகண்டா, 1-0 என்ற கோல் கணக்கில் கொங்கோவை வென்றது; பேர்க்கினா பாஸோ, 2-0 என்ற கோல் கணக்கில் கேப் வேர்ட் தீவுகளை வென்றது.

மொராக்கோ, ஐவரிகோஸ்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி, 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையானது; கமரூன், ஸாம்பியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையானது; ஜோர்ஜியா, மோல்டா அணிகளுக்கிடையிலான போட்டி, 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையானது;மாலி, கபோன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது

article_1479044521-Qualifier-(2)

Related posts: