உடல் வெப்பத்தின் மூலம் காயங்களை விரைவில் ஆற்றும் புதிய முறை நாசாவினால் கண்டுபிடிப்பு!
Saturday, October 15th, 2016
எலெக்ட்ரான் மூலம் மனித உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றும் புதிய முறையை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய முறையின் மூலம் உடலின் செல் வளர்ச்சியைத் தூண்டி காயங்களை விரைவில் ஆற்ற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கருவிகள் உடல் வெப்பத்தின் மூலம் இயங்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மனித உடலின் வெப்பத்தால் இதில் உள்ள எலெக்ட்ரான்கள் தூண்டப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின்சாரம் உடலின் செல் வளர்ச்சியை அதிகப்படுத்தி, காயங்களை விரைவில் ஆற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
’எலெட்க்ட்ரோ ஆக்டிவ் பாண்டேஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முறை மனித உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றும் வலிமை பெற்றது என்று விஞ்ஞானிகள் சோதனை மூலம் நிரூபித்துள்ளனர்.

Related posts:
|
|
|


