இலவச ‘Wi-Fi’ ஆபத்தானதா?

Wednesday, March 9th, 2016
இணைய உலாவலுக்கு உதவும் நவீனத் தொழில்நுட்பமான ‘Wi-Fi’ தற்போது பல்வேறு பொது இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பயன்படுத்துவதற்கு எளிதான தன்மை, இலவசம் மற்றும் வேகம் காரணமாக பலரும் ‘Wi-Fi’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் அதுவே, பல சமயங்களில் பயனாளர் களுக்கு ஆபத்தாக அமைவதாக ஆய்வு ஒன்றின் அடிப்படையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.ஒரு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 4 மணிநேரத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் ‘வை-பை’ வசதியை பயன்படுத்தியிருந்ததுடன், ஏராளமான தரவுகளையும் பரிமாற்றம் செய்திருந்தனர்.

அந்த தரவுகளை தனிநபர் நலன் கருதி ‘வை-பை’ சேவையை வழங்கிய நிறுவனம் சேமிப்பது இல்லை என்றாலும், ‘ Wi-Fi ‘யில்  இணைந்து கொண்டு தனிநபர்களின் தரவுகளை கைப்பற்றுவதற்கான சாத்தியம் ஹேக்கர்களுக்கு அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுஇடங் களில் இலவச ‘Wi-Fi’  வசதியைப் பயன்படுத்த விரும்புவோர் ஜாக் கிரதை.’ஸ்னாப்சாட்’டின் புதிய வசதி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சாட்டிங் செய்து மகிழும் வசதியைத் தரும் ‘ஸ்னாப்சாட்’, ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சாட்டிங் செய்துகொண்டிருக்கும் வேளையிலேயே ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வசதிதான் அது. ஆன்லைன் வணிகத்தை அடிப்படையாகக் கொண்டு மிக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த வசதியின் வழியாக  பயனாளர்களுக்கு எளிதான, பரந்த சேவையை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாக ‘ஸ்னாப்சாட்’ வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும், இதன் மூலம், சாட்டிங் சேவையை வழங்கும் பிற நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில் முன்னேற முடியும் என ‘ஸ்நாப்சாட்’ நம்புகிறது.

Related posts: