இலங்கைக்கு அருகில் ஆபத்தான தீவு!
 Thursday, August 17th, 2017
        
                    Thursday, August 17th, 2017
            
இந்தியப் பெருங்கடலில், இலங்கைக்கு கிழக்கு பக்கத்தில் அழகான சிறிய தீவு ஒன்று அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு அருகிலேயே இந்த தீவு உள்ள போதிலும் அங்கு எந்தவொரு சுற்றுலா பயணிகளும் செல்ல முடியாதென தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள இந்த தீவு, சர்வதேச ரீதியாக சுற்றுலாவுக்கான ஆபத்தான தீவாக பெயரிடப்பட்டுள்ளது.நோர்த் சென்டினேல் (North Sentinel) என பெயரிடப்பட்டுள்ள இந்த தீவில் ஒரு சில பழங்குடியின குழுக்கள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகள் அல்லது பார்வையாளர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி கொள்ளாத இந்த தீவின் பழங்குடியினர் பார்வையாளர்களை தாக்குவதற்கு அஞ்சுவதில்லை என குறிப்பிடப்படுகின்றது. உணவு அல்லது வேறு எந்தவொரு பொருள் வழங்கினாலும் பார்வையாளர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி கொள்ளாத அவர்கள் கட்டுக்கடங்காத குழுக்களாகும் என குறிப்பிடப்படுகின்றது
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        