இப்படி ஒரு திமிங்கலமா?

அவுஸ்திரேலியாவில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ராட்சத திமிங்கலம் ஒன்று கடலில் மிதந்து வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள கடலில் Mr Watkins(36) என்ற மீனவர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, இவரது படக்குக்கு அருகில் ஏதோ ஒன்று மிதந்து வந்துள்ளது, அதனைப்பார்த்த இவர் அது படகு அல்லது வெப்ப காற்று பலூனாக இருக்கும் என்று நினைத்துள்ளார்.
ஆனால் மெது மெதுவாக அருகில் நெருங்கி வர, அதனைப்பார்த்த இவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது, ஏனெனில் அது ராட்சத திமிங்கலம், பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அந்த திமிங்கலத்தின் வயிற்றில் அதிக காற்று நிரப்பப்பட்டுள்ளதால், அதன் உருவம் அளவில் அதிகரித்துள்ளது என்றும், மேலும் அதன் உடம்பிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அது இறந்துவிட்டது என நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
தற்போது, கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இதனை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் திமிலங்கைத்தினை பார்க்கையில் இப்படி ஒரு பெரிய திமிங்கலமா? என ஆச்சரியம் கொள்ள வைக்கிறது.
Related posts:
Hack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறவேண்டுமா?
துபாய் நகரில் உலகின் மிக உயரமான சொகுசு ஹோட்டல் திறப்பு!
‘சந்திரயான் 2’ இன் தொடர்பு துண்டிப்பு -‘இஸ்ரோ’!
|
|