ஆயிரக்கணக்கான மரபணுக்களை நகலெடுக்கும் தொழில்நுட்பம்!

தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றது, இவற்றில் மரபணுத்தொழில்நுட்பமும் ஒன்றாகும். இந்நிலையில் மரபணுத் தொழில்நுட்பத்தில் தற்போது மற்றுமொரு புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது ஒரே தருணத்தில் ஆயிரக்கணக்கான மரபணுக்களை குளோனிங் முறையில் நகல் செய்யும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பமானது LASSO என அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவின் நியூ ஜேர்ஸியிலுள்ள Rutgers பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்றே இப் புதிய தொழில்நுட்பத்தினை கண்டுபிடித்துள்ளது.
ஆய்வின்போது E.coli பக்டீரியாவின் DNA இயிலிருந்து 3,000 வரையான துண்டுகளை நகல் செய்துள்ளது. இது 75 சதவீதம் வெற்றிகரமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
பேஸ்புக் மெசேஞ்சரில் Dislike பட்டன் விரைவில்!
இலங்கையில் இலத்திரனியல் பேருந்துகள்!
செவ்வாய் கிரகத்தில் நீர்!
|
|