அழிந்து கொண்டிருக்கும் விலங்குகளின் பட்டியலில் ஒட்டகச்சிவிங்கி!

Thursday, December 8th, 2016

ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை நம்பமுடியாத வகையில் குறைந்திருப்பது அவை அழிந்து போவதற்கான எச்சரிக்கையான எச்சரிக்கையாக அமைந்துள்ளதுஎன இயற்கை பாதுகாப்பிற்கான ஒரு சர்வதேச ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் மொத்த எண்ணிக்கை குறைந்தது 40 சதவிகித அளவில் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு  தெரிவித்துள்ளது.

தற்போது ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால் அதை அழிந்து கொண்டிருக்கும் பட்டியலில் உடனடியாக வைக்க தூண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு மனித நடவடிக்கைகளே முக்கிய காரணம் என்று ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயத்திற்காக விலங்குகளின் வாழ்விட அழிப்பு, பிராந்திய மோதல்கள் மற்றும் விலங்குகளை வேட்டையாடுவது போன்றவற்றையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

ஒட்டகச்சிவிங்கிகளின் நிலைக்கு, தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை விழிப்புணர்வை அதிகரிக்கும் என்றும், அதன் வாழ்நாளை உறுதி செய்யும் என்றும் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

_92880426_gettyimages-482834882-1

Related posts: