அறிமுகமாகின ஏபரின் தானியங்கி கார்கள்!

டாக்ஸி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏபர், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் முதல்முறையாக தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு தானியங்கி வாகனங்களை முதல்முறையாக இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தானியங்கி வாகனங்கள் குறித்த ஊபர் நிறுவனத்தின் ரகசிய பணிகள் இந்த சேவையின் மூலம் வெளிக்கொணரப்பட்டுவிட்டன.
லேசர்ஸ், கேமராக்கள் மற்றும் பிற சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்தக் கார்கள் தாமாவே ஓட்டிச் சென்று, வழக்கமான ஊபர் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொள்கின்றன; பிட்ஸ்பர்கின் போக்குவரத்து நெரிசலை சமாளித்துக் கொள்ளும் திறன் கொண்டவையாகவும் உள்ளன.
முதலில் இந்த தானியங்கி கார்களில், பயணிகளுடன் இரு ஊபர் தொழில்நுட்ப வல்லுநர்களும் பயணிப்பர் அதில் ஒருவர், ஸ்டீயரிங்கின் பின் அமர்ந்து , தேவைப்பட்டால் நிலைமையை சரி செய்யவும் மற்றும் ஒருவர் காரின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் இருப்பார்கள். இதே மாதிரி திட்டம் கடந்த மாதம் சிங்கப்பூரில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|