ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் அபராதம்!
Friday, February 3rd, 2017
சட்டத்திற்குப் புறம்பாக வேறொரு நிறுவனத்தின் மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 500 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் வாங்கிய ஆக்குலஸ் என்ற நிறுவனமானது, ஸெனிமேக்ஸ் என்ற வீடியோ கேம் தயாரிக்கும் நிறுவனத்தின் சொந்த மெய் நிகர் ஹெட்செட்களை வெளியிடுவதற்கு வைத்திருந்த கணணி குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் ஆக்குலஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கானது ஃபேஸ்புக் நிறுவனத்தின் சமீபத்திய வரவு செலவு முடிவுகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளது.

Related posts:
40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வேற்றுக்கிரக வாசிகளின் இருப்பிடம் கண்டுபிடிப்பு!
66 மில்லியன் ஆண்டுகள் முந்தைய பேரழிவின் தகவல் கண்டுபிடிப்பு!
சந்திரனில் துள்ளிக் குதித்த விக்ரம் லேண்டர் - புதிய இடத்திலும் ஆய்வுக்கருவிகள் சோதனை!
|
|
|


