IMF அங்கீகாரம் முதல் காலாண்டில் இலங்கையினால் பெற முடியும் – இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை!
Tuesday, January 17th, 2023
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அங்கீகாரத்தை இலங்கையினால் பெற முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை சாதகமான முடிவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்க்கது
000
Related posts:
பால்மா இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை!
இளம் பெண்ணின் சடலம் இரணைமடு பகுதியில் மீட்பு: பாலியல் துஷ்பிரயோகத்தின் கொலை என சந்தேகம்!
உலகின் ஆரோக்கியமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இலங்கை!
|
|
|


