H1N1 வைரஸ் குறித்து வைத்தியசாலைகளுக்கு விழிப்புநிலை அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு எச்1என்1 வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜயசுந்திர பண்டார தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜயசுந்திர பண்டார நேற்று கண்டி வைத்தியசாலைக்கு சென்று அங்கு நிகழ்ந்த இரண்டு மரணங்கள் குறித்து தகவல்களை தெரிந்துக்கொண்டார்.
இந்தநிலையில் கண்டி வைத்தியசாலையில் ஏ என்1என்1 வைரஸ் தொற்றுகைக்கு உள்ளானதாக கருதப்படும் 12 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டார்.இந்தநிலையில் குறித்த நோய் குறித்து நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் விழிப்பு நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
தலைமன்னாரில் ரஸ்யா நாட்டு பிஜை கைது – “கொரோனா” தொற்று சந்தேகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் தனிமைப்பட...
நாட்டில் 94 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெ...
மோட்டார் சைக்கிள் விபத்து - யாழ்ப்பாணத்தில் இளைஞனின் ஒருவர் பலி!
|
|