GSP+ வரிச்சலுகை: 6,600 பொருட்களுக்கு தீர்வை வரி இரத்து!

GSP+ வரிச்சலுகை அமுலுக்கு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த (18) ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 6,600 பொருட்களுக்கு தீர்வை வரி அறவிடப்பட மாட்டாது என பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக ஆடைகள், பழங்கள், இறப்பர், பாதணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தீர்வை வரி அறவிடப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.GSP+ வரிச்சலுகை கிடைக்கப்பெற்றதை அடுத்து, புதிய முதலீட்டாளர்களை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Related posts:
சிறுவர்களை கடத்திய பெண்: பண்டத்தரிப்பில் பெரும் பரபரப்பு!
நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது - சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவிப்பு!
க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பிக்கும் முடிவு திகதி 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் - கல்வி அமைச்சு அ...
|
|