GSP+ வரிச்சலுகை நாட்டிற்கு கிடைப்பதையிட்டு சில அரசியல் நயவஞ்சகர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் – பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா!
Monday, January 16th, 2017
GSP+ வரிச்சலுகை நாட்டிற்கு கிடைப்பதையிட்டு சில அரசியல் நயவஞ்சகர்கள் அதனை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என மின்சார மற்றும் மீள் சக்திவலு பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
GSP+ வரிச்சலுகையை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார். மின்சக்தி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
அந்த செயற்பாட்டுக்காக அரசாங்கத்தின் பெரிய குழுவொன்று இணைந்த செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று அந்த வரிச்சலுகை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியும் நயவஞ்சகமான கருத்தையே வெளியிட்டதாகவும், அவர் முன்னாள் நிதியமைச்சர் என்றவகையில் GSP+ வரிச்சலுகையை குறைத்து மதிப்பிடுவது பிரச்சினைக்குரிய விடயம் எனவும் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.

Related posts:
|
|
|


