FCID யின் கடமைகளில் தலையிட மாட்டேன்- பிரதமர்!

Monday, November 21st, 2016

அனைத்து முறைப்பாடுகளும் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரது கடமைகளில் தான் எந்த நிலையிலும் தலையிட மாட்டேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதேரணில் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பனர் கெஹலிய ரம்புக்வெல்ல எழுப்பிய கேள்விகளுக்குபதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகளை சேகரிக்கும் குழுவினர்,பின்னர் முறைப்பாடுகளை பொலிஸாரிடம்ஒப்படைத்து விடுவர் என ரணில் கூறியுள்ளார். புதிய முறைப்பாடுகள் நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுபிரிவில் பதிவு செய்யப்பட்டாலும் அந்த முறைப்பாடுகள் முறைப்பாடு சேகரிக்கும்பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படுவதுடன்,அரசாங்கத்திற்கும்அறிவிக்கப்படும்.

பின்னர் குறித்த முறைப்பாடுகள் பொலிஸாருக்கு அனுப்பிவைக்கப்படும் என ரணில் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து முறைப்பாடு சேகரிக்கும் குழுவினரை தான்ஒரு போதும் சந்தித்ததில்லை என்றும் அவர்களுக்கு எந்த ஆலோசனையும் வழங்கவில்லைஎன்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ranil

Related posts: