A/L மீள்பரிசீலனைக்கான இறுதித் திகதி வெளியானது!

2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கலாம் என இறுதித் திகதியை பரீட்சைகள்திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அவர்களின் பெறுபேறுகள் தொடர்பில் திருப்தியடையாத பட்சத்தில் விண்ணப்பிக்கமுடியும். இதனடிப்படையில் 163,104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான அனுமதியைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
காலத்தின் பதிவுகளை பாதுகாக்கும் வகையில் படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
மதுபான நிறுவனங்களுக்கு வரிச்சலுகை இல்லை!
புதிய நாடாளுமன்ற கூட்டத்தின்போது புதிய அரசின் கொள்கை அறிக்கையை அறிவிப்பார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
|
|