A/L மாணவர்களுக்கு!

Sunday, July 24th, 2016

நடைபெறவுள்ள உயர்தரப்பரீட்சையின் போது இடம்பெறக்கூடிய குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் புதிய சட்டத்திட்டங்களை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் இதற்காக நடவடிக்கை எடுத்துவருகின்றதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் டப்லியூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

சமூக தொடர்பாடல் வசதிகள் மற்றும் ஸ்மார்ட் வகை கைக்கடிகாரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றசெயல்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தபடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் டப்லியூ.எம்.என்.ஜே புஸ்பகுமார இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தரப்பரீட்சை நாடு பூராகவும் 2 ஆயிரத்து 204 பரீட்சை நிலையங்களில் நடைப்பெறவுள்ளது.இந்த பரீட்சையில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 991 உள்வாரியான பரீட்சாத்திகளும் 74 ஆயிரத்து 614 வெளிவாரியான பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர். உயர்தரப்பரீட்சைகள் ஒகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த காலப்பகுதியில் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பரிட்சையின் போது இடம்பெறக்கூடிய குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts: