A/L பொது அறிவுப் பரீட்சை ஒத்திவைப்பு!
Friday, August 25th, 2017
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொது அறிவு பாடத்துக்கான பரீட்சையை, 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு, கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது என, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2ஆம் திகதி, முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை கொண்டாடுவதால், அன்று இடம்பெறவிருந்த மேற்குறிப்பிட்ட பாடத்துக்கான பரீட்சையைப் பிற்போடுமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே, தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக, அமைச்சர் அகிலவிராஜ் அறிவித்துள்ளார்.
Related posts:
GSP+ வரிச்சலுகை நாட்டிற்கு கிடைப்பதையிட்டு சில அரசியல் நயவஞ்சகர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் - பி...
பாணின் விலை குறைப்பு - அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்!
வடக்கில் போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க "புனர்வாழ்வு நிலையம்" அவசியம் - வைத்தியர் சத்...
|
|
|


