ADIC நிறுவனத்தின் சுவிடன் பிரதிநிதி – ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன் இடையே விஷேட சந்திப்பு!

Thursday, October 31st, 2019

ADIC நிறுவனத்தின் சுவிடன் பிரதிநிதி நிக்ளஸ் அவர்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களை சந்தித்து  போதைப் பொருட்களை ஒழிப்பு விழ்ப்பணர்வு தொடர்பில்  கலந்துரையாடியுள்ளார்.

கோப்பாய் பிரதேச  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பொது இடங்களிலிருந்து 500m வரையான தூரத்திற்குள் மதுபானம் மற்றும் போதை தரும் பொருட்களை விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கடந்த 29.10.2018 ஆம் திகதி   இராமநாதன் ஐங்கரன் அவர்களால் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.  அத்துடன் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியமைக்காக இராமநாதன் ஐங்கரன் அவர்களுக்கு நன்றி  கூறியதுடன்.அதனை மேலும் முன்னெடுத்து செல்லுமாறும் அதற்கான ஆலோசனைகள் வழங்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் குறித்த நிறுவனத்தின் இலங்கை பிரநிதி டினேஸ் மற்றும், யாழ்ப்பாண பிரதிநிதி கோடீஸ் அவர்களும் ,தென்மராட்சி பிரதேச சபையி உறுப்பினர் ஜெகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: